fbpx
Connect with us

அஜித்தைப் பின்பற்றும் விஜய்.?

அஜித்தைப் பின்பற்றும் விஜய்.?

ajith-vijay-theriரஜினிகாந்தை எப்படி குட்டீஸ்களுக்கும் அதிகமாகப் பிடித்ததோ அதே போல விஜய்யையும் குட்டீஸ்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்காகவேதான் விஜய் “புலி” படத்தில் நடித்தார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்களின் தவறான அணுகுமுறையால் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் தன்னுடைய அடுத்த படமான “தெறி” படத்திலும் குட்டீஸ்களைக் கவரும் விதத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பது போலத்தான் “தெறி” டீசரும் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே தினத்தில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகளுடன் இருக்கும் த்ரிஷாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஆனால், த்ரிஷா இறந்துவிட அவரது மகளை அஜித் எப்படி தன்னை அப்பா போல பாவித்து பாசத்தைக் கொட்டுகிறார் என்பதுதான் ஆக்ஷன் கலந்த கதையாகச் சொல்லப்பட்டிருக்கும்.

“தெறி” டீசரைப் பார்க்கும் போதும் இந்தப் படமும் அப்பா, மகள் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவே தெரிகிறது. விஜய்யின் மகளாக நடித்துள்ள மீனாவின் மகள் நைனிகாவை டீசர் காட்டாமலே தவிர்த்திருக்கிறார்கள். கோலிவுட்டில் சொல்வது போல் “தெறி” படமும் விஜயகாந்த் நடித்த “சத்ரியன்” படத்தின் உல்டாவாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. இருந்தாலும் “என்னை அறிந்தால்” அஜித்தையும் விஜய் தொடர்கிறாரோ என்ற சந்தேகமும உள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top