சினிமா பிரபலங்கள் அரசியலில் குதிப்பது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என பல பிரபலங்கள் சினிமாவில் கிடைத்த ஆதரவால் அரசியலில் களம் கண்டார்கள். அதேபோல் அதிக ரசிகர்களை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் ரஜினி தற்போது அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்தார். தமிழகத்தில் நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு அமோக வரவேற்பை பெற்று கணிசமான வாக்குகள் பெற்றனர்.
இதனால் தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிறைய வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தை நடிகர் விஜய் தான் மறைமுகமாக இயக்குகிறாரா என்பது தெரியவில்லை. விஜய் மக்கள் இயக்கம் சென்ற தேர்தலில் கிடைத்த வெற்றியால் தற்போது தைரியமாக களம் காண உள்ளனர்.
ஆனால் விஜய் மக்கள் இயக்கம் கட்சியைப் பதிவு செய்யவில்லை. இதனால் இக்கட்சிக்கு பல விமர்சனங்கள் எழுகிறது. இந்த கட்சிக்கு பின்னாலிருந்து விஜய் செயல்படுகிறா அல்லது வேறு புதிவித முயற்சியா என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இக்கட்சியை பதிவு செய்தால் விஜய்யின் பெயர் வெளியே தெரிந்துவிடும் என்பதால் பதிவு செய்யாமல் உள்ளார்கள் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கட்சி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி கண்டால் ஜெயித்து விட்டோம் என மார்தட்டிக் கொள்வார்கள்.
ஒருவேளை தோற்றுவிட்டால் இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று விலகிவிடலாம். இதனால்தான் இந்த கட்சி இன்னும் பதிவு செய்யாமல் உள்ளனர். ரஜினி தோற்று விடுவோமோ என்ற பயத்தில் விலகியது போல விஜயும் இதுபோன்ற புது யுக்தியை பயன்படுத்தி இருக்காரோ என்னவோ.