தளபதி 67 படம் உங்களுக்குத்தான், கதை ரெடி பண்ணுங்க.. இளம் இயக்குநருக்கு போன் போட்ட விஜய்

விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இதனை தொடர்ந்து ரஷ்யாவிலும் சில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதால் இன்னும் சில தினங்களில் படக்குழுவினர் ரஷ்யா கிளம்பவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் விஜய் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்திற்கான இயக்குனரையும் விஜய் தேர்ந்தெடுத்து விட்டதாக சினிமாவின் மூத்த பிரபலம் ஒருவர் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

தளபதி 67 படத்தை தனக்கு ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அட்லீ தான் இயக்க உள்ளாராம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட விஜய், அட்லீயை அவரது அலுவலகத்தில் சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

அப்போது அட்லீ ஒரு லைன் மட்டும் சொன்ன நிலையில் அது விஜய்க்கு பிடித்துப்போக சமீபத்தில் அவருக்கு போன் செய்து ஷாருக்கான் படத்தை முடித்த பிறகு தளபதி 67 படத்திற்கான வேலைகளை தொடங்குமாறு கூறிவிட்டாராம். இருந்தாலும் விஜய் சமீபகாலமாக கடைசி நேரத்தில் இயக்குனர்களை மாற்றி வருவதால் அட்லீ கொஞ்சம் உசாராக இருக்க வேண்டுமாம்.

vijay-atlee-cinemapettai
vijay-atlee-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்