fbpx
Connect with us

நடிகர் விஜயின் முதல் சம்பளம்.! இயக்குனர் சந்திரசேகர் கூறிய ஆச்சரியமான தகவல்.!

News | செய்திகள்

நடிகர் விஜயின் முதல் சம்பளம்.! இயக்குனர் சந்திரசேகர் கூறிய ஆச்சரியமான தகவல்.!

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

mersal

இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை நிகழ்த்திய நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி மெர்சல் திரைப்படம் உலக அளவில் ரூ.247 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ.120 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் ரூ.12.85 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.22 கோடியும், கோவையில் ரூ.20 கோடியும், மதுரையில் ரூ.21 கோடியும், நெல்லை-குமரியில் ரூ.8 கோடியும் மெர்சல் படம் வசூல் செய்துள்ளது.

mersal

தளபதி விஜய் தற்போது வரை சினிமாவிற்குள் வந்து 25 வருடங்கள் ஆகிறது. முதலில் பல படங்கள் தோல்வி அடைந்தாலும், படிப்படியாக ஒவ்வொரு படமாக ஹிட் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஒரு நடிகராக உருவாகியுள்ளார் விஜய். இதனால் தற்போது பலகோடி சம்மளம் பெறுகிறார் விஜய்.

ஆனால், இவர் கதா நாயகனாக நடித்த முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்திற்கு முன்னரும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் திரைப்படத்தில் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

vijay

இதனை அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். சமீபத்தில் விசிறி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் இது போன்ற பலவற்றைப் பேசினார்.

மேலும், விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் ‘வெற்றி’. 1984ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்மபளம் ₹. 500 எனக் கூறினார் இயக்குனர் சந்திரசேகர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top