Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பர்ஸ்ட் லுக்.! கடுப்பான அன்புமணி ராமதாஸ்

புகைப்பிடிப்பதை பிரபலப்படுத்தியதற்கு விஜயை நினைத்து வெட்கப்படும் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

விஜய் தன்னுடைய 62வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். படத்தில் ராதா ரவி, பழ கருப்பையா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். நாளை அவரது பிறந்தநாளை கூட ரத்து செய்து விட்டு அமெரிக்காவில் படப்பிடிப்புகளில் விஜய் கலந்து கொண்டு இருக்கிறார். எப்போதும் சமூக பிரச்சனையை பேசும் இக்கூட்டணி இந்த முறையும் அதே யுத்தியை கையில் எடுத்து இருக்கிறது. அதன்படி, இப்படத்தில் சமகால அரசியல் கதை பின்னணியாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, படத்தின் டைட்டில் பல நாட்களாக சஸ்பென்ஸாக வைக்கப்பட்டது. ஆயுத பெயராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை வித்தியாசமாக சர்கார் என்ற பெயரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டைட்டில் அறிவித்ததில் இருந்து, செம குஷி மூடிற்கு ரசிகர்கள் மாறினர். சமூக வலைத்தளம் முழுவதும் சர்கார் மயமாக ஒரே போட்டோக்களால் சூழப்பட்டது. அதுமில்லாமல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் விஜய் செம லுக்கில் இருந்தார். இளமையாக வாயில் ஒரு சிகரெட் என பாக்கவே பக்காவாக காணப்பட்டார். இதுவே ரசிகர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியது. ஆனால், விஜய் படம் என்றாலே அதில் சர்ச்சை இருக்க வேண்டுமே என்பதை நிரூபிக்கும் விதமாக படத்தின் முதல் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

அதன்படி, பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடித்து இருப்பதை அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடி இருக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், நீங்கள் சிகரெட் இல்லாமலேயே செம ஸ்டைலிஷாக இருக்கிறீர்கள். தனது அடுத்த படத்தில் புகைப்பிடிப்பதை ப்ரோமோட் செய்த நடிகர் விஜயை நினைத்து வெட்கப்படுகிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து, அன்புமணி ராமதாஸுன் கோரிக்கையை ஏற்று புகைப்பிடிப்பது போல் நடிக்க மாட்டேன் என விஜய் தெரிவித்து இருந்த பேப்பர் கட்டிங்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை எதுவரை போகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top