ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட ஏஜிஎஸ் நிறுவனம்.. ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு இவ்வளவு அக்கப்போரா!

கொரோனா தாக்கத்தினால் கடந்த இரண்டு வருடங்களாகவே திரையரங்குகளில் திரைப்படங்கள் சரிவர திரையிட முடியாமல் உச்ச நாயகர்களின் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்கில் தண்ணீர் பாட்டில் ஒன்று 50 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அவ்வாறு விலை கொடுத்து தண்ணீர் வாங்கிய நபரொருவர், அதற்கான ரசீதை படம்பிடித்து தனது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பெரிய பெரிய திரையரங்குகளில் யாரும் தண்ணீர் பாட்டில் மற்றும் தின்பண்டங்களை கொண்டு செல்வதை அனுமதிப்பதில்லை. எனவே படம் பார்க்கும் இடைவெளியில் தண்ணீர் தேவைப்பட்டால் அதனை திரையரங்கில் வாங்கிக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

இதை சாதகமாக வைத்துக்கொள்ளும் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் வாங்கும் பொருட்களில் எல்லாம் இஷ்டத்திற்கு விலையை நிர்ணயிக்கின்றனர். அவ்வாறு தான் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்கிலும் நடந்துள்ளது.

ags-twit-reply
ags-twit-reply

இதற்கு பதில் அளித்த ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர் அர்ச்சனா, ‘உங்களது அனுபவத்திற்கு மன்னிக்கவும், வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவர அனுமதிக்கிறோம். மேலும் பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே எங்களால் குடிநீர் வினியோசிப்பவர்களை திரையரங்கில் வைத்துக்கொள்ள முடியவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவிற்கு சிலர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் வேறு சிலர் ‘750ml தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய் கொடுத்து வாங்குவதில், நான்கு புரோட்டா மற்றும் ஒரு கலக்கியை வாங்கி விடலாமே’ என்று கேலி செய்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்