இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோருடன் ரொமான்ஸ், டூயட் காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது.

மூன்று கெட்டப்களில் ஒன்றான அப்பா விஜய் மதுரையை பூர்வீகமாக கொண்டவாராக நடிக்கிறாராம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்தது. இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துவந்தார். அவர் ஊர் மக்களுக்கு பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் கட்டிக்கொடுப்பது என செய்வாராம்.

தற்போது மகன் விஜய் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து முடித்து விட்டு, மதுரைக்கு வந்து அங்கிருந்து வந்து மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்களை தட்டிகேட்பாராம்.

விஜய் 61 படத்தின் முக்கிய கிளைமாகஸ் காட்சிகள் இங்கு தான் எடுக்கப்படவுள்ளதாம்.