ஃபேஸ்புக்கில் சமந்தாவை பங்கமாக கலாய்த்த தளபதி விஜய்.. கத்தி சமயத்தில் விஜய் போட்ட பதிவு செம வைரல்

vijay-samantha-cinemapettai
vijay-samantha-cinemapettai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து பல டிவி சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் சமீபகாலமாக மொத்தத்தையும் நிறுத்திவிட்டார்.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். முன்னெல்லாம் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரடியாக சமூக வலைதளங்களில் பேசும் விஜய் தற்போது சுத்தமாக சமூக வலைதள பக்கமே வருவதில்லை. படத்துக்கான விளம்பரம் என்றால் மட்டுமே சமூக வலைதளப் பக்கத்தில் வருகிறார்.

விஜய்யுடன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்துள்ளனர். அந்த வகையில் விஜய் சங்கவி, விஜய் திரிஷா, விஜய் காஜல் அகர்வால், விஜய் சமந்தா போன்றோர் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதில் விஜய் மற்றும் சமந்தா ஜோடிக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. விஜய் மற்றும் சமந்தா கூட்டணியில் வெளிவந்த கத்தி, மெர்சல், தெறி போன்ற அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

அந்த வகையில் விஜய்யின் கத்தி படப்பிடிப்பின் போது சமந்தாவை பற்றிய கேலியான பதிவு ஒன்றை விஜய் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது அப்போதே செம வைரல் ஆனது. இருந்தாலும் அந்த காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிப்பு கம்மியாக இருந்ததால் பலரும் அதை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தற்போது சமூக வலை தளங்கள் மட்டுமே ஒரு மனிதனின் பொழுது போக்கு அம்சமாக மாறி உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த பதிவை எடுத்து விஜய் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த பதிவில் விஜய், சமந்தா பற்றி விஜய்யிடம் கேட்டால் இப்படித்தான் சொல்லுவார் என்பதைப் போல கிண்டலடித்துள்ளார் தளபதி விஜய்.

vijay-fb-post-about-samantha
vijay-fb-post-about-samantha
Advertisement Amazon Prime Banner