fbpx
Connect with us

அஜீத்துக்கு வாழ்த்து கூறிய ட்விட்டரை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்.. மிரண்டுபோன மற்ற மொழி நடிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜீத்துக்கு வாழ்த்து கூறிய ட்விட்டரை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்.. மிரண்டுபோன மற்ற மொழி நடிகர்கள்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போதைக்கு இரண்டே இரண்டு ஆளுமைகள் தான் சமூக வலைதளங்களில் ஆட்டிப் படைத்து வருகின்றனர். அவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் ஆவர்.

இருவரது ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இருவரைப் பற்றியும் ஏதாவது ஒரு சின்ன விஷயம் வந்தாலும் அதை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உலகப்புகழ் அடையச் செய்து விடுவார்கள்.

அந்த வகையில் மே 1ம் தேதி தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தல ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே தல அஜித்தை பற்றி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வந்தனர். ஆனால் சமீபத்தில் விஜய் அஜித் ரசிகர்களுக்கு சண்டை முற்றி இருவரும் மாறி மாறி அசிங்கப்படுத்திக் கொண்டனர்.

இதனால் அனைவருமே எதிர்பார்த்தது அஜித் பிறந்த நாளன்று விஜய் ரசிகர்கள் அசிங்கமான பதிவு ஒன்றை ட்ரெண்ட் செய்வார்கள் என்று தான். ஆனால் நடந்தது வேறு. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் என விஜய் புகழ்ந்து இருப்பார்.

தற்போது அந்த வார்த்தையை பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது தான் இணையதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. #NanbarAjith விஜய் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கு தெரிவித்துள்ளனர்.

விஜய் அஜித் ரசிகர்களை மட்டும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. எப்போது அடித்துக் கொள்கிறார்கள் எப்போதும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள் என யோசித்தாலே பைத்தியம் பிடித்து விடும். தப்பித்தவறி சம்பந்தமே இல்லாமல் வேறு யாராவது ஒருவர் அஜீத்தையோ, விஜய்யையோ அசிங்கப்படுத்தி விட்டால் அவர்கள் நிலைமை அதோ கதிதான்.

அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி என்பதைப்போல விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதும் ஒன்றுதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top