சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் என்றால் அது அஜித் விஜய் ரசிகர்கள்தான் இருக்கமுடியும், ரசிகர்கள் சண்டை போட்டுகொள்வது வழக்கமாக உள்ளது,ஆனால் இது வேறமாதிரி போய்டுச்சே.

பெண் செய்தியாளர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் ரசிகரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாரூக்கான் படத்தை விஜய்யின் சுறா படத்துடன் ஒப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் விஜய் ரசிகர்கள் தனக்கு எதிராக அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை பதிவிட்டதாக செய்தியாளர் தன்யா ராஜேந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய் ரசிகரான ராம்குமார் என்பவரின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.