Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய விஜய் ரசிகர்கள்! இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இவங்க வேற என புலம்பும் இயக்குனர்
எடுத்த படமே ரிலீஸ் ஆகுமா என்ற கவலையில் தளபதி விஜய் இருக்கும்போது அடுத்த படத்தை பற்றிய வதந்தியை கிளப்பி விட்டு விட்டார்கள் அவரது ரசிகர்கள்.
கொரானா அச்சத்தால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களையும் வணிக வளாகங்களையும் மூடச்சொல்லி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் வெளியாக இருந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிவிட்டன.
அடுத்து சினிமா உலகம் மட்டுமல்லாமல் தியேட்டர்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை தான். இந்த வருடத்தில் இதுவரை வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வசூல் செய்யாததால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது மாஸ்டர்.
ஆனால் ஏப்ரல் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகுமா என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள், இயக்குனர் அஜய் ஞானமுத்து விக்கிபீடியாவில் ஒரு வேலையை செய்து அவரை திண்டாட வைத்துள்ளனர்.
அதாவது தளபதி 65 படத்தை அஜய் ஞானமுத்து இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க 2021 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவர இருப்பதாகவும் எடிட் செய்து விட்டார்கள் போல. உடனே பதறியடித்து அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அது தவறான செய்தி என அறிவித்துவிட்டார்.

ajay-gnanamuthu-tweet
இருந்தாலும் மனதுக்குள் அப்படி ஒரு விஷயம் நடந்தால் மிகவும் சந்தோசம் தான் என்பதைப் போல ஸ்மைலி ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் ரஷ்யாவில் கொரானா காரணமாக தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
