Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாநில சர்கார்..மத்திய சர்கார்.. அதலாம் தெரியாது தளபதி சர்கார் தான் தெரியும், கெத்து காட்டிய 75 வயது ரசிகர்.!
விஜய் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மேலும் இன்று மிக பிரமாண்டமாக சர்க்கார் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினார்கள், மேலும் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் தனியார் கல்லூரியை சுற்றிலும் பேனர் போஸ்டர் பிளக்ஸ் என அசத்தி விட்டார்கள்.
இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வார் என்று தெரிந்து சும்மாயிருப்பார்களா ரசிகர்கள், ஒரு பெரிய அரசியல்வாதியை வரவேற்பதுபோல் தளபதி விஜய் வரவேற்றுள்ளார்கள் ரசிகர்கள், இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட 75 வயது ரசிகர் மாநில சர்க்கார் மத்திய சர்க்கார் என்பதெல்லாம் தெரியாது தளபதி சர்க்கார் மட்டும் தான் தெரியும் என கெத்து காட்டியுள்ளார்.
அதே போல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது, இந்த படத்தை வேற லெவலில் கொண்டாட தயாராகி வருகிறார்கள் என்பதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
