mersal movie review
mersal vijay

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், கடந்த வாரம் புதன்கிழமை தீபாவளியன்று ரிலீஸானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை, 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது.

mersal

பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்த ‘மெர்சல்’ படம், 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரம் முடிந்து, நேற்றுடன் இரண்டாவது வாரம் தொடங்கியிருக்கிறது. இதற்காக கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பிய கேரள விஜய் ரசிகரான ஸ்ரீநாத், பஸ் மோதி பலியாகியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ரஜினி,கமல் படங்களை தொடர்ந்து விஜய் படத்தை குறிவைக்கும் தயாரிப்பாளர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருக்கும் இவரை, ‘லவ் டுடே’ ஸ்ரீநாத் என்றால் எல்லோருக்கும் எளிதாக விளங்கும். விஜய்யின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட முதல் கேரள ரசிகர் இவர்.

vijay fan

இவரை மையமாக வைத்து சமீபத்தில் ‘போக்கிரி சைமன்’ என்ற மலையாளப் படம் கூட ரிலீஸானது. ஸ்ரீநாத் கேரக்டரில் ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் அப்பானி ரவி என்ற சரத் நடித்திருந்தார்.

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் வெளியாகி அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதிகம் படித்தவை:  விஜய் பட நாயகிக்கு அழைப்பு விடுத்த அதிபர் ஒபாமா

இன்று இரண்டாவது வாரத்தை இந்தப் படம் எட்டியுள்ளதால் அதற்கான பேனர்களை திருவனந்தபுரத்தில் கட்டிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய கேரள விஜய் மக்கள் இயக்கம், திருவனந்தபுரம், செயலாளர் லவ் டுடே ஸ்ரீநாத் என்பர் பேருந்து மோதி காலமானார்.

vijay fans

இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான இவரை மையமாக வைத்து உருவான போக்கிரி சைமன் என்ற மலையாளப் படம் கடந்த மாதம் வெளிவந்தது. ஸ்ரீநாத்தின் திடீர் மரணம் கேரள விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்கிரி சைமன் படத்தில் ஸ்ரீநாத் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அப்பானி சரத், தகவல் அறிந்ததும் ஸ்ரீநாத் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.