திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

தளபதி என்று கத்திய ரசிகர்கள்.. முகம் சுழித்த சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது கங்குவா படம். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது கங்குவா. இந்தப் படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் அடுத்தடுத்து படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வட இந்தியாவில் தீவிரமாக ப்ரோமோஷனில் ஈடுபட்டு வரும் சூர்யா தற்போது தென்னிந்தியா பக்கமும் ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் பார்த்த ஒரு வேலை சூர்யாவை கடுப்பேற்றி உள்ளது.

சூர்யாவை கடுப்பேற்றிய விஜய் ரசிகர்கள்

கங்குவா பட பிரமோஷன்கள் அடுத்தடுத்து சென்னை, மும்பை, டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த இடங்களில் சூர்யாவிற்கு அதிகமான வரவேற்பு காணப்பட்டது.

இதனிடையே சூர்யாவை சூப்பர்ஸ்டார் என்று ஒருவர் அழைக்க, பெருந்தன்மையாக எப்போதுமே ஒரு சூப்பர்ஸ்டார் மட்டும் தான். சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சூர்யா மேடையில் நிற்க, ஒரு சில விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் என்று கத்தியிருக்கிறார்கள்.

இது சூர்யாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, கோபத்தையும் கிளப்பியுள்ளது. யாருக்காக இருந்தாலும், கடுப்பாகத்தான் செய்யும். குறிப்பாக பட ப்ரோமோஷன் க்கு வந்த இடத்தில், இப்படி கத்தினாள் அது அவருக்கு ஒரு வகையில் அவமானமும் கூட.

விஜய் ரசிகர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். விஜய் சொன்னால் கண்டிப்பாக ரசிகர்கள் கேட்பார்கள். அப்படி இருந்தும், அவர் ஏன் தன் ரசிகர்களை அடக்க மறுக்கிறார். ஒரு வேலை இதை ரசிக்கிறாரா? ஏன் இந்த விஜய் ரசிகர்கள் மட்டும் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News