fbpx
Connect with us

விஜய் ரசிகர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ், நீங்கள் பயந்தது நடக்கவில்லை…!!!

News / செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ், நீங்கள் பயந்தது நடக்கவில்லை…!!!

அக்டோபர் 18-ம் தேதி வெளியாகவுள்ள ‘மெர்சல்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு, பல்வேறு திரையரங்குகள் காத்திருக்கின்றன.

கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்க டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றது.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் டிக்கெட் கட்டண விவரங்கள் மற்றும் 8% கேளிக்கை வரி உள்ளிட்டவற்றை தெளிவுப்படுத்தினார்கள். இதனால் ‘மெர்சல்’ வெளியீட்டில் எவ்வித பிரச்சினையுமில்லை என்று தகவல் வெளியானது.

vijay

(அக்டோபர் 14) காலை முதலே சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ‘மெர்சல்’ முன்பதிவு தொடங்கப்பட்டது. சில முக்கிய திரையரங்குகளில் இன்னும் ‘மெர்சல்’ முன்பதிவு தொடங்கப்படவில்லை.

இது குறித்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “தணிக்கை பிரச்சினை முடிவுற்று சான்றிதழ் கிடைத்தவுடனும், தமிழக அரசு புதிய டிக்கெட் கட்டண விவரங்களை முறையாக அரசாணை வெளியிடும் வரை ‘மெர்சல்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏஜிஎஸ் திரையரங்க முன்பதிவு குறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசின் டிக்கெட் கட்டண விவரத்தின் அரசாணைக்காக காத்திருக்கிறோம்.

mersal magic

mersal magic

அதனைத் தொடர்ந்து டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு ‘மெர்சல்’ முன்பதிவு தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் பல முக்கிய திரையரங்குகளில் ‘மெர்சல்’ முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

மேலும், விலங்குகள் நல வாரியத்தின் கடிதம் மற்றும் தணிக்கை குழுவின் பதிலால் ‘மெர்சல்’ வெளியீட்டு சிக்கலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தடையில்லா சான்று வழங்க விலங்குகள் நல வாரியம் மெர்சல் படத்தின் சில காட்சிகளில் கையை வைத்துவிடுமோ என்று விஜய் ரசிகர்கள் அஞ்சினார்கள்.

Thalapathy Vijay with Gogo Requiem

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்காமல் இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் இன்று தடையில்லா சான்று வழங்கியுள்ளது. சான்று வழங்க படத்தின் காட்சிகளில் கையை வைத்துவிடுமோ என்று ரசிகர்கள் அஞ்சினர்.

நல்ல வேளை விலங்குகள் நல வாரியம் எந்த காட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து அதை நீக்குமாறு கூறவில்லை. அதனால் படம் கத்தரி போடாமல் அப்படியே ரிலீஸாகிறது. தளபதி ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளி இன்றே துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top