Connect with us

Cinemapettai

Thalapathy-vijay

Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. ரசிகர்கள் காத்திருந்தது வீண்போகவில்லை

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்கள் இப்படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர்.

1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திரையுலகிற்கு அறிமுகமானார். அதே வருடத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர்கள் இருவரும் ஒரே ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் மொத்தம் நான்கு படங்கள் மட்டுமே இணைந்து பணியாற்றியுள்ளனர். உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் ஆகிய நான்கு படங்களில் விஜய்யும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளனர். ஆனால் இந்த 4 படத்திலும் விஜய் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐந்தாவது முறையாக பிகில் படத்தின் மூலம் இணைந்திருக்கும் இவர்கள் இருவரும் ரகுமான் இசையில் நடிகர் விஜய் முதல் முறையாக பாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் 27 ஆண்டுகளாகியும் ரகுமான் இசையில் பாடாமல் இருந்த விஜய். தற்போது முதல்முறையாக பாட உள்ளதால் இந்த பாடலை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top