Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி ரசிகர்களின் வெறித்தனம் – வைரலாகுது பிகில் விநாயகர். போட்டோ உள்ளே
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மீண்டும் ரெடியாகும் பிரம்மாண்ட படமே பிகில். பிகில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகின்றது. பட அப்டேட் கேட்ட அனைவருக்கும் இந்த மாதம் முழுவதும் படத்தினை பற்றி தெரிவித்த வண்ணமே இருப்பேன் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் சொன்னார். அதே போல் முதலாவதாக விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.
நேற்று விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இறைவனின் சிலைகளை வடிவமைப்பதில் ஒரு சிலர் தங்கள் கற்பனையை புகுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் ரசிகர்கள் சிலர், விநாயகருக்கு பிகில் பட போஸ்டரில் உள்ள கலரில் சட்டை, வேட்டி மற்றும் அரிவாள் என வடிவமைத்துள்ளனர்.

Bigil-Vinayagar

Bigil-Vinayagar
இந்த போட்டோஸ் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது .

Bigil-Vinayagar
