Connect with us
Cinemapettai

Cinemapettai

Andrea

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு வார்த்தையால் மொத்த விஜய் ரசிகர்களையும் கோபப்படுத்திய ஆண்ட்ரியா.!

நடிகை ஆண்ட்ரியா பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். அதன் பின்பு முதன் முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் தான் அறிமுகமானார், அதன் பின்பு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததில் இருந்த அனைவரின் பாராட்டை பெற்றார்.

அதன் பின்பு பல படங்களில் நடித்து விட்டார் தரமணி படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்று விட்டார் இந்த படம் இவரின் மார்கெட்டை பெருமடங்கு உயர்த்தியது மேலும் இவர் நடிக்கும் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இவர் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார் அதில் அங்கு உள்ள மாணவர்கள் உங்களுக்கு தல பிடிக்குமா தளபதி பிடிக்குமா என கேட்டுள்ளார் சற்றும் யோசிக்காமல் தல என கூறியுள்ளார் அதனால் இதை கேட்ட விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கோவமாக இருக்கிறார்கள். அதேபோல் விஜய்யுடன் கூகுல் கூகுல் என்ற பாடலை இணைந்து பாடியுள்ளார் ஆண்ட்ரியா, அதேபோல் ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top