mersal

கேரளாவில் நடிகர் விஜயின் தீவிரமான பெண் ரசிகை ஒருவரின் புகைப்படம் விஜய் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மெர்சல்’. இதில் நித்யா மேனன், சமந்தா, வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

mersal

பல தடைகளை தாண்டி இந்த திரைப்படம் நாடு முழுவதும் தீபாவளி தினந்தன்று வெளியாகியது. இந்த படத்தின் முதல் நாள் காட்சி வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது, இந்நிலையில் மெர்சல் திரைப்படம் கேரளாவில் பல முன்னணி திரையரங்குகளில் திரையிடைப்பட்டுள்ளது. கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

இதற்க்கு முன் தமிழகத்து ரசிகர்கள் கூட நினைத்துப் பார்க்காத ஒன்றை நடிகர் விஜய்யின் கேரள ரசிகர்கள் முடித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆம்! கேரளாவில் நடிகர் விஜய்க்கு சிலை வைத்து கவுரவித்திருக்கிறார்கள் கேரள ரசிகர்கள்.

mersal

விஜய்க்கு தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் அங்கு 100 நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கின்றன.

தமிழகத்தை போலவே அங்கும், விஜய் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து அசத்தும் கேரள ரசிகர்கள், ஒருபடிமேலே போய் சிலை வைத்திருக்கிறார்கள்.

அங்குள்ள ஷோரனூரில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலையை காவலன் சூட்டிங்கில் பங்கேற்ற விஜய்யிடம் காட்டியிருக்கிறார்கள் ரசிகர்கள். தேரில் வைத்து இழுத்து வந்து விஜய்யிடம் சிலையை காட்டிய ரசிகர்களுக்கு அவர் நன்றியினை தெரிவித்துக் கொண்டார் என்று விஜய்யின் மேலாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

vijay fans

கேரளாவில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை கை கால்களை அசைக்கும் வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருப்பது ஹைலைட்டாம்.

ஆனால் இப்பொழுது பெண் ஒருவர் கொச்சியில் உள்ள ஒரு திரையரங்கில், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர், விஜய் புகைப்படம் அமைந்துள்ள கட் அவுட் மீது ஏறி பூக்களைக் கொட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட விஜய் ரசிகர்கள் பலர், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர்.