Connect with us

Cinemapettai

மெர்சல்-யாராலையும் நினைந்து பார்க்க முடியாத சாதனையை நிகழ்த்திய விஜய் ரசிகர்கள்..

Cinema News | சினிமா செய்திகள்

மெர்சல்-யாராலையும் நினைந்து பார்க்க முடியாத சாதனையை நிகழ்த்திய விஜய் ரசிகர்கள்..

இன்று விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து என்று தான் சொல்லணும் காரணம் இன்று மெர்சல் படத்தின் இசை வெளியீடு அதோடு இந்த இசை வெளியீடு விழா என ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று மிக பெரிய திடலில் பண்ணவேண்டும் என்று தயாரிப்பளருக்கு விஜய் சொல்லி அதன் படி விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று ரசிகர்களுக்காக அதிகமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மெர்சல் சாதனை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே போய்கொண்டு இருக்கிறது.விஜய் தற்போது நடித்து வரும் மெர்சல் படத்தின் மீது எல்லையில்லா எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள், படத்தின் டீஸர், சாங்ஸ், என அனைத்துமே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.mersal audio teaser 1

இந்த படத்தில் தமிழரின் பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளை பற்றி கூறி தமிழர்களை பெருமைப்படுத்த உள்ளனர்.இந்நிலையில் தற்போது ட்விட்டரில் மெர்சல் படத்திற்கென தனி எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது, இது மெர்சல் படத்திற்கு மேலும் பெருமையை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு தமிழில் ஒரு படத்துக்கு டுவிட்டர் பக்கத்தில் Emoji வந்தது இதுவே முதன்முறை. இந்த மெர்சல் Emoji நேற்று தான் டுவிட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.இதுவரை வரை மெர்சல் என்ற ஹாஸ் டாக்கில் இதுவரை 900K ரசிகர்கள் டுவிட் செய்து உள்ளனர். இன்னும் 100K வந்தால் மில்லியன் ஹாஸ் டாக்கினை தொட்டுவிடும்.

விரைவில் மில்லியன் ஹாஸ் டாக் தொட்டுவிட்டால் தமிழ் சினிமாவின் கின்னஸ் சாதனை மெர்சல் படம் செய்துவிடும் என்று ரசிகர்கள் டுவிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top