Connect with us
Cinemapettai

Cinemapettai

biggboss-5

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் பங்கேற்கும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி.. இவங்க கொஞ்சம் வெயிட்டான ஆளுதான்.!

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல் அதில் பங்கேற்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் நடிகர் ஆரி அர்ஜுன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தற்போது இவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் புதிய படங்களில் நடித்து வருகின்றனர்.

இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ரசிகர்கள் அனைவரும் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது.

முன்னதாக நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பது விஜய் டிவியில் வெளியான ப்ரோமோ வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது. ஆனால் இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான கனி, சிவாங்கி, அஸ்வின் மற்றும் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

priyanka-vijay-tv

priyanka-vijay-tv

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர் கலந்துகொள்ள இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top