புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய்க்கு எதிராக நகர்த்தப்பட்டு முதல் காய்.. தளபதியை சுற்றி வளைக்கும் அரசியல் பரமபதம்

TVK Vijay: விஜய் கட்சி மாநாடு நடத்தி வாரம் பல கடந்து விட்டது இன்னும் எதுவும் நடக்கவில்லையே என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அரசியல் தலைவர்கள் டீசன்டாக கருத்து சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டார்கள். நடுவில் சிக்கியது என்னவோ திருமாவளவன் மற்றும் சீமான் தான்.

இன்னொரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் வந்தவர் போனவர் எல்லாம் திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என வாய் விட்டுவிட்டு அதை அப்படியே சைலன்ட் மோடுக்கு கொண்டு வந்து விட்டார். அரசியல் என்ற நுழைந்த பிறகு பலமான கட்சிகளின் தாக்குதலை சந்தித்து ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

விஜய்க்கு எதிராக நகர்த்தப்பட்டு முதல் காய்

இதில் நடிகர் விஜய் அரசியலுக்கு முன்பே தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் ரிலீஸ் செய்ய எவ்வளவு போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஒரு அரசியல் கட்சிக்கு தலைவராகி, முதல் மாநாட்டில் லட்ச கணக்கில் கூட்டத்தை கூட்டி விட்டார்.

இனி அவரை கட்டம் கட்டி அடிக்க ஆரம்பிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் முதன் முதலில் கை வைத்திருப்பது தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட விருந்தகம் உணவகத்தில் தான்.

அதாவது விஜய் கட்சியின் நிர்வாகிகள் விருந்தகம் என்ற பெயரில் உணவகத்தை ஆரம்பித்து தினமும் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்கள். பல மாவட்டங்களிலும் இந்த விருந்தகம் செயல்பட்டு வருகிறது.

இப்படி பட்ட சூழ்நிலையில் மதுரையில் செயல்பட்டு வந்த விருந்தகத்தை இழுத்து மூட அறிவிப்பு வந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசலை இதற்கு காரணமாக சொல்வதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சொல்லி இருக்கிறார்கள். மேலும் விக்கிரவாண்டியில் நடந்த முதல் கட்சி மாநாட்டிற்கு பிறகு பலவிதத்திலும் தங்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

Trending News