விஜய்-க்கு சுத்தமா அந்த Knowledge கிடையாது.. ஒவ்வொண்ணும் என்கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுப்பாரு.. உண்மையை உடைத்த ஜீவா

புகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு விஜயை ட்ரோல் மெட்டீரியளாக மாற்றிவிட்டார் நடிகர் ஜீவா. ஜீவா விஜய் இருவரும் சேர்ந்து நடித்த படம் நண்பன். இந்த படத்திற்கு பிறகு, இவர்கள் நிஜத்தில் உயிர் நண்பர்களாக மாறிவிட்டனர். இன்று வரை இவர்கள் நட்பு நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஜீவா சொன்ன சில விஷயங்கள் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து அவர் பேசும் போது, “விஜய் சாருக்கு அப்போது கிரிக்கெட்டெல்லாம் பெரிதாக தெரிகிறது. முதல் முறையாக ஐபிஎல் மேட்ச் நடக்கும் போது நான் அவருடன் இருந்தேன். அப்போது ஒரு பால் பவுண்டரி சென்றது. அப்போது அவர் பவுண்டரி என்றால் 4 ரன்களா? 6 ரன்களா என்று கேட்டார்.”

“அதைக்கேட்ட போது அண்ணா நீங்கள்தான் இதற்கு அம்பாசிடர் நீங்களே இப்படி சொல்லலாமா என்று கேட்டேன். அப்போது அவருக்கு அவ்வளவுதான் கிரிக்கெட் அறிவு இருந்தது. ஆனால், அவரது பையன் சஞ்சய்க்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நாங்கள் நடத்திய சிசிஎல் போட்டிக்கும் இரண்டு, மூன்று முறை வந்தார். அவர் தந்த ஆதரவு மிகப்பெரியது.” என்று பேசினார்.

உன்ன நண்பன்னு நம்பி கேட்டதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட என்பதற்கு ஏற்ப, ஜீவா இப்படி சல்லி சல்லியாக நொறுக்கிவிட்டார். விஜய்க்கு தான் கிரிக்கெட் அறிவு இல்லையே தவிர, அவர் மகன் ஜேசன் அப்படி இல்லை. கிரிக்கெட்டை கரைத்து குடித்தவர். அவருக்கு அதில் அலாதி ப்ரியமாம்.

தளபதி விஜய் அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது அனைத்து வயதினரும், ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அரசியலில் வெற்றி வாகை சுடுவதற்கு முன், ஒரு சரியான படத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டு மெல்ல விடைகொடு விடைகொடு மனமே என்று கிளம்புகிறார்.

இப்படி இருக்க, சமீபத்தில் ஜீவா சொன்ன இந்த விஷயங்கள் தற்போது எக்ஸ் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -spot_img

Trending News