Connect with us
Cinemapettai

Cinemapettai

அனிதா குடும்பத்திற்கு இளைய தளபதி அளித்த நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?

vijay as cm

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனிதா குடும்பத்திற்கு இளைய தளபதி அளித்த நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?

நீட் தேர்வின் தாக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளைய தளபதி விஜய் தனது இரங்கலை அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அனிதாவின் வீட்டில் தரையில் அமர்ந்து கொண்டு ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாது அவரது வீட்டின் வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி தன்னுடைய இரங்கலை தெரிவித்தார் இளைய தளபதி.

அதுமட்டுமில்லாமல் அனிதா குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளாராம் நம் இளைய தளபதி. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராக களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக அவர்கள் இதயத்தில் வாழும் தளபதிக்கு ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top