இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவரின் ரசிகர் மன்றம் தற்போது மக்கள் இயக்கமாக மாறிவிட்டது.

அந்த மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் விஜய் குறித்து பல தகவல்கள்களை பகிர்ந்துள்ளார்.

இதில் குறிப்பாக விஜய்க்கு கடன் வாங்கி தனக்காக கட்-அவுட், போஸ்டர் வைப்பது பிடிக்காதாம், மேலும், தன்னால் முடிந்தால் மட்டுமே செய்யுங்கள்.

மற்றவர்கள் செய்வதை பார்த்து ஒரு போதும் நீங்கள் கடன் வாங்கி செய்யக்கூடாது என்று கூறுவாr, அப்படி தெரிந்தால் உடனே தன்னை அழைத்து இதையெல்லாம் கொஞ்சம் கவனியுங்கள் என்று கண்டிப்பார் என ஆனந்த் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் ரசிகர் ஒருவர் விஜய்க்காக கையில் இரத்தம் வரும்படி ப்ளேடால் கீறியது விஜய்க்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.