Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீசையில்லாமல் நடித்த தளபதி விஜய்.. என்ன ரோல் தெரியுமா? எதிர்பார்ப்பைக் கிளப்பும் மாஸ்டர்
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய ஹிட் அடித்து எதிர்பார்ப்பை கிளப்பியது.
கோழி அடை காப்பது போல் மாஸ்டர் படக்குழு தளபதியை பற்றிய விஷயங்களை வெளியிடாமல் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர். இருந்தும் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் இருந்த தளபதி விஜய்யின் புகைப்படங்கள் கசிந்து வந்தன.
இந்நிலையில் சுறா படத்திற்கு பிறகு தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் மீசை இல்லாமல் நடிப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தும் படக்குழு இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் இப்படி ஒரு கேரக்டர் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட்.
ஏற்கனவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் மாஸ்டர் படம், தற்போது தளபதி விஜய் மீசை இல்லாமல் காலேஜ் பையனாக நடித்துள்ளதாகவும் தெரிகிறது. ஏனென்றால் கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது இந்த சந்தேகத்தை கிளம்பியுள்ளது.
ஆக மொத்தத்தில் சம்மரில் பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கப்போவது உறுதி.
