தமிழ் சினிமாவட்டாரத்தில் ரஜினிக்கு பிறகு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் பலத்தை யார் சொல்லியும் தெரிய வேண்டியது இல்லை அவர் அவர்களுக்கே தெரியும்.

ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களை அதிர வைப்பவர்கள். இந்நிலையில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான்.ரசிகர்களுக்குள் தான் எப்போதும் மோதல் இருந்துக்கொண்டே இருக்கும், இது ஒரு பக்கம் இருக்கட்டும், தற்போது சூப்பர் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.ajith vijay vishal plan

அது வேறு ஒன்றுமில்லை, தளபதி விஜய் நீண்ட நாட்களாக சரண் இயக்கத்தில் நடிக்க இருந்து ஒரு வழியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அப்படத்தின் கதை விவாதம் எல்லாம் நடந்து கடைசியில் ஒரு சில காரணத்தால் படம் ட்ராப் ஆகியுள்ளது.ajith

பிறகு அந்த படத்தில் அஜித் நடிக்க, படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது, அந்த படம் வேறு ஏதுமில்லை, அஜித் இரட்டை வேடங்களில் அசத்திய அட்டகாசம் தான், இதை சரண் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.