Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிரட்டும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்ட விஜய் தேவரகொண்டா.. வருத்தத்தில் ரசிகர்கள், ஹிட்டனா வேற லெவல்
தெலுங்கில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘நுவ்விலா’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமானார்.
சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் அபிஷேக் கபூர் இயக்கவுள்ள படத்திற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்த படம் பால்கோட் தாக்குதலை மையப்படுத்தி உருவாக உள்ளது என இருவரும் முன்பே அறிவித்துவிட்டனர். இந்தப்படத்தில் விஜய்தேவரகொண்டா இந்திய ராணுவத்தின் கமாண்டராக நடிக்கவுள்ளார்.
இந்திய நாட்டில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தானில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் இந்திய ராணுவத்தினர் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களை விமானங்களைக் கொண்டு அழிக்க முற்பட்ட போது இந்திய விமான படையினர் அடித்து விரட்டினர்.
அவ்வாறு துரத்தும் போது F-16 என்ற அதிநவீன பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு, இந்திய விமானத்திலிருந்து குதித்து விட்டார் இந்திய கமாண்டர் அபிநந்தன். அவர் உயிர்தப்பிக்க குதித்த இடமோ பாகிஸ்தான் எல்லை இப்படி தான் கதைக்களம் அமைக்கப்படுகிறது.
இந்தப்படத்தில் அபிநந்தன் கேரக்டரில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காதலுக்கு பெயர் போன நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராணுவ வீரராக இமேஜின் கூட செய்து பார்க்க முடியவில்லை என்கின்றனர் அவரது ரசிகைகள்.
