தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோ இவர் தான். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதற்கு ஒரே காரணம் “அர்ஜுன் ரெட்டி” படம் தான். இன்றைய யூத் சென்சேஷன் இவர் தான். தற்பொழுது சாவித்ரியின் பயோபிக் நடிகையர் திலகம், இருமுகன் பட இயக்குனரின் NOTA என்ற இவரது அடுத்த இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகிறது. இது மட்டுமன்றி ராகுல் சங்கரித்யன் என்பவர் இயக்கும் படத்திலும் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு மார்ச் 23 வெளியிடுவதாக முன்னரே அறிவிப்பு வந்தது.

#vijaydevarakonda

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

டாக்ஸிவாலா

‘டாக்ஸிவாலா’ என்ற இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பிரியங்கா மற்றும், மாளவிகா நாயர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார், சாய்குமார் ரெட்டி திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசை. ‘UV கிரியேஷன்ஸ் – GA2 பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  தன் 25 வது படத்தை பற்றி டீவீட்டிய அருண் விஜய் !
Vijay Devarkonda Taxiwaala

இந்நிலையில் நேற்று விஜய் தேவரகொண்டா சமூகவலைத்தளங்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ நல்ல ரீச் ஆகியுள்ளது. அநேகமாக ஹாலிவுட் ட்ரான்ஸ்போர்ட்டர் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்பது இந்த வீடியோவை பார்க்கும் பொழுதே தெரிகின்றது.