fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நம்ம ஊரு புரூஸ் லீ- லைக்ஸ் அள்ளுது விஜய் தேவர்கொண்டாவின் லைகர் ட்ரைலர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நம்ம ஊரு புரூஸ் லீ- லைக்ஸ் அள்ளுது விஜய் தேவர்கொண்டாவின் லைகர் ட்ரைலர்

டோலிவுட்டின் யூத் சென்சேஷன் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டா. ஒரே படம் வாயிலாக இந்தியா முழுக்க ரீச் பெற்றார்.

இவர் நடிப்பில் பான் – இந்திய படமாக ரெடி ஆகி வருகின்றது லைகர். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக இணைந்து தயாரித்து ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர்.

விஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி போடுகிறார் அனன்யா பாண்டே. ரம்யாகிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். குத்துச்சண்டை புகழ் மைக் டைசன் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பூரி ஜகன்னாத்தின் 10 வது படம் லைகர் (LION + TIGER = LIGER). படம் ஆகஸ்ட் மாதம் 25 ரிலீஸ் ஆகவுள்ளது.

மும்பையின் சேரி பகுதியில் டீ மாஸ்டராக இருக்கும் நம் நாயகன் எப்படி உலகளவில் பிரபலமான மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை என்பது ட்ரைலர் பார்த்தவுடன் புரிகிறது.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த ட்ரைலர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top