fbpx
Connect with us

விஜய் தேவர்கொண்டாவின் சிறு வயது வீடியோவை வெளியிட்ட ரசிகர். நானே ரிப்பீட் மோடில் பார்க்கிறேன் என பாராட்டிய ஹீரோ.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் தேவர்கொண்டாவின் சிறு வயது வீடியோவை வெளியிட்ட ரசிகர். நானே ரிப்பீட் மோடில் பார்க்கிறேன் என பாராட்டிய ஹீரோ.

விஜய் தேவர்கொண்டா

மிகவும் விசுவாசமான ரசிகர் வட்டத்தை கொண்ட தெலுங்கு சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் அதிக நபர்களின் ஆதரவை பெற்றவர் தான் விஜய் தேவர்கொண்டா சாய். மனிதர் நிற்பது, நடப்பது, உடுத்துவது என அனைத்துமே பேஷன் ஆகிவிடுகிறது. அர்ஜுன் ரெட்டி வாயிலாக இந்திய முழுவதும் ரீச் ஆகிவிட்டார் என்றால் அது மிகையாகாது.

Vijay Devarkonda

இந்நிலையில் ட்விட்டரில் இவர் சிறுவனாக நடித்த ஒரு சீரியலின் காட்சி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. ரசிகர் ஒருவர் தான் சீரியலில் வரும் இந்த காட்சியை மட்டும் கட் செய்து, இவரையும் டாக் செய்து அதனை பதிவிட்டார்.

அந்த வீடியோவுக்கு நம் ஹீரோவும் துள்ளி குதித்து பதில் தந்துள்ளார். “என் குழந்தை பரும் ட்ரெண்டிங்கில் உள்ளது, அந்த சிறுவனும் ஸ்டார் தான். நானே வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். யார் இதனை கண்டுபிடித்தீர்களோ நான், என் அம்மா மற்றும் பலருக்கு இன்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளீர். ” என்றார்.

டோலிவுட்டின் பி வி எஸ் ரவி “நடிப்பில் முதல் பாடம், கண் சிமிட்டாமல் வசனம் சொல்வது. நீ அதை உன்னிப்பாக செய்துள்ளாய், இப்பொழுது அந்த கண்கள் நட்சத்திரம் போல் ஜொலிக்கிறது.” என்று பாராட்டி பதிவிட்டார்.

விஜய் தேவர்கொண்டாவின் ரசிகர்கள் பலரும் சூப்பர், க்யூட் என்றெல்லம் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top