எமோஷனல் ரோலர் கோஸ்டர் பயணம் – “டியர் காம்ரேட்” திரைவிமர்சனம்.

பரத் கம்மா குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆனவர், அவர் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ரிலீஸாகியுள்ள படம்.

கதை – கல்லூரி மாணவனாக ஹீரோ பாபி. மாணவர்கள் சார்மன். அநியாயத்தை தட்டி கேட்கும் போராளி வகையறா. உறவினர் வீட்டிற்கு கல்யாணம் சமயத்தில் வரும் பெண்ணாக அபர்ணா தேவி என்கிற லில்லி. கூடவே மகளிர் கிரிக்கெட்டில் ஸ்டேட் பிளேயர். விஜய் தேவர்கொண்டாவிற்கு ரஷ்மிக்கா மீது காதல் பற்றிக்கொள்கிறது. எனினும் அவள் மறுக்கிறாள், தன் ஊர் சென்று விடுகிறாள். பிரிவு தான் காதலை உருவாகும் என்பது போல , அவளும் காதல் வயப்படுகிறாள். இனிதாக செல்கிறது வாழக்கை, எனினும் ஹீரோவின் கோபத்தால், பிரிகிறது ஜோடி வருகிறது இடைவேளை.

தன் தாத்தாவின் அறிவுரைப்படி, பயணம் செய்கிறார் ஹீரோ. இசையால் நோயயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். மூன்று வருடம் கழித்து தன் காதலியை மனநல மருத்துவமனை பிரிவில் சந்திக்கிறார். அவளையும் தன்னுடன் அழைத்து சென்று குணமாக்குகிறார்.

அவள் கிரிக்கெட் ஆடுவதை விடுவதற்கான கரணம் தெரிய வர, ஒரு காம்ரேடாக அவளுக்காக போராட ரெடி ஆகிறான். ஹீரோயின் பயந்து ஒதுங்குகிறாளா அல்லது இணைந்து போராடுகிறாளா என்பதுடன் முடிகிறது படம்.

பிளஸ் – தேவர்கொண்டா – ராஷ்மிக்கா கெமிஸ்ட்ரி, ஜஸ்டின் பிரபாகரன் இசை.

மைனஸ் – படத்தின் ஓடும் நேரம் , திரைக்கதை.

அலசல் – தேவர்கொண்டாவிற்காகவே ரெடி செய்யப்பட்ட ரோல். அப்பாவி பெண்ணாக ராஷ்மிக்காவும் அசத்தியுள்ளார். பழக்கப்பட்ட காதல் காட்சிகள் தான் என்றாலும், இது ஒரு பீல் குட் படம் என்று நம்மை சீட்டில் உட்காரவைக்கிறது முதல் பாதி.

இரண்டாம் பாதியில் தான் சோதனை. தேடலில் செல்லும் ஹீரோ, என்ன ஆனது என்றே புரியாத ஹீரோயின் நிலை. இடையில் ஸ்போர்ட்ஸ் பாலிடிக்ஸ் மற்றும் மீ டூ விவகாரம் என மெஸேஜ் சொல்ல முறைப்பட்டு சிக்கி தவிக்கிறது படத்தின் கதையும் நாமும். எனினும் ஹீரோ மற்றும் ஹீரோயினின் நடிப்பு மட்டுமே நம்மை காக்கிறது.

ரேட்டிங்

விஜய் தேவர்கொண்டா ரசிகர்களுக்கு – 3 /5

சாமானிய ரசிகனின் பார்வையில் – 2.5 / 5

Leave a Comment