Connect with us
Cinemapettai

Cinemapettai

liger-movie-review

Reviews | விமர்சனங்கள்

சரவெடி இல்ல இது பிஜிலி பட்டாசு.. விஜய் தேவரகொண்டாவின் லைகர் விமர்சனம்

பூரி ஜெகன்னாத் – விஜய் தேவர்கொண்டா தெலுங்கு சினிமாவில் ஸ்டார் வால்யூ உள்ள இருவர்; இவர்களின் பேன் இந்திய படம் தான் லைகர்-  புலி மற்றும் சிங்கத்தின் கலவை. அதிக எதிர்பார்ப்பு, அதி மிஞ்சிய ப்ரோமோஷனுக்கு மத்தியில் ரிலீஸாகியுள்ள இப்படம் எப்படி என வாங்க பார்ப்போம்.

கதை– திக்கு வாய் பிரச்சன்னை உள்ள நம் ஹீரோவை தேசிய எம் எம் ஏ (மிக்சட் மார்ஷியல் ஆர்ட்ஸ்) சாம்பியன் ஆக்க வேண்டும் என மும்பை அழைத்து வருகிறார் அம்மா ரம்யாகிருஷ்ணன்.  பணம் இல்லை ஆனால் இவனுக்கு நீங்கள் தான் கோச்சிங் கொடுக்க வேண்டும் என பயற்சியாளரிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த மையத்தில் வேலைக்கு சேருகிறார் விஜய் தேவர்கொண்டா. ஒரு புறம் பயிற்சியாளரின் கவனத்தை ஈர்க்கிறார், மறுபுறம் ஜாலி நாயகியுடன் காதல். நாயகி இவரது குறையை சொல்லி பிரேக் அப் செய்ய, ஹீரோவின் முழு கவனமும் போட்டியின் மீது திரும்புகிறது.

Also Read :160 கோடி சோழிய முடிச்சு விட்ட விஜய் தேவரகொண்டா.. லிகர் படைத்தால் நொந்து போன ஆடியன்ஸ்

நாயகி சகோதரனை வீழ்த்தி தேசிய சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் நோக்கி செல்கிறார். அங்கும் வெற்றிகளை குவிக்கிறார். தனக்கு அமெரிக்கா செல்ல ஸ்பான்சர் செய்தது யார், நாயகியின் உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிய வர, கிளைமாக்சில் வில்லனை அதாங்க  மைக் டைசனை சந்தித்து செல்ல சண்டை போடுகிறார்.

சினிமாபேட்டை அலசல்– பழைய சோறு தான் ஆனால் புதிய டப்பாவில் அடைத்து விற்க முயற்சித்துள்ளார் இயக்குனர். படம் முழுக்க விஜய் தான் நம்மை கவர்கிறார். உடல் மொழி, நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என வேற லெவலில் கலக்கியுள்ளார். ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரம் அடிக்கடி நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. கிளாமர் மற்றும் பாடல்களுக்காக மட்டுமே நாயகி.

Also Read :ஊர் ஊராய் சுற்றி விளம்பரப்படுத்திய விஜய் தேவர் கொண்டா கூட்டணி ஜெயித்ததா.? லிகர் ட்விட்டர் விமர்சனம்

லைகர் கமெர்ஷியல் மற்றும் ஆக்ஷன் சினிமா இந்த இரண்டின் கலவை. தெலுங்கு படம் என பார்க்கும் பட்சத்தில் பைசா வசூல், ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான், ஆனால் ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யும் பட்சத்தில் சற்றே கூடுதலாக உழைத்திருக்க வேண்டும் இந்த டீம்.

இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் ட்ரேட் மார்க் எப்பொழுதும் இரண்டாம் பாதியில் தான் தெரியும், அந்த மேஜிக் இப்படத்தில் மிஸ்ஸிங். சூப்பர் என்று சொல்ல மனது வரவில்லை, அதே நேரத்தில் இதனை மொக்கை எனவும் சொல்ல முடியாது, ஓகே வகையறா இப்படம். ஆகமொத்தத்தில் இந்த லைகர் பாக்ஸ் ஆபிசில் கர்ஜிக்க போவதில்லை என்பதே நிஜம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.25 / 5

Also Read :தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜய் தேவரகொண்டா.. லிகர் பட வசூலுக்கு வந்த ஆபத்து!

Continue Reading
To Top