விஜய் தேவர்கொண்டா

தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோ இவர் தான். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதற்கு ஒரே காரணம் “அர்ஜுன் ரெட்டி” படம் தான்.

ஆனந்த் ஷங்கர்

vijay devarkonda

முருகதாஸின் சீடரும், அரிமா நம்பி, இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் தேவர்கொண்டா. அவருக்கு ஜோடியாக மெஹரீன் பிர்சாதா நடிக்கிறார். மேலும் நாசர் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோஸில் நடந்தது.

studio green

NOTA

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு NOTA என்றும், படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் எதிர்மறையான விமர்சனகளையும், வேறு விதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

#vijaydevarakonda

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

எலெக்ஷனில் NOTA என்பது நமக்கு இந்த லிஸ்டில் இருக்கும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை குறிப்பதே. மேலும் விஜய் வெள்ளை குர்தா அணிந்துள்ளார். தன்னுடைய நாடு விரலை உயர்த்தி காட்டிருக்கிறார். மேலும் அந்த விரலில் வோட்டிங் மை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாக் – ட்ராப்பில் ஊழல், திருட்டு, கள்ள ருபாய் நோட்டு, குழந்தை கற்பழிப்பு, 2 G போன்ற பல அன்றாட நிகழ்வுகளின் நியூஸ் பேப்பர் ஆர்டிகிள் உள்ளது.

என்னவே இப்படம் கட்டாயம் தற்பொழுது உள்ள அரசியல் நிகழ்வுகளை குறிவைத்து எடுக்கப்படும் பொலிட்டிகள் படம் என்பதில் துளியும் ஐயமில்லை.

தயாரிப்பாளருக்கு ரெட் கார்டா ?

studio green raja

பிரஸ் மீட், இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த சினிமா சம்பந்தமான விழா நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதை மீறி பத்ரிக்கையாளர் சந்திப்பு நடத்தியதன் காரணமாக ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மீது தற்போது ரெட் போட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதிகார்போரர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை என்பது தான் தற்போதைய நிலை.