ஆனந்த் ஷங்கர்

thuppaki

இவர் பாலிவுட்டில் உதவி இயக்குனராக இருந்தார். அதன் பின் இவர் முருகதாஸிடம் 7 ஆம் அறிவு, துகுவ் ப்பாக்கி படங்களில் பணி புரிந்தார். விக்ரம் பிரபுவின் ‘அரிமா நம்பி’ படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். பின்னர் சீயான் விக்ரம், நயன்தாரா கூட்டணியில் இருமுகன் படத்தை இயக்கினார்.

விஜய் தேவர்கொண்டா

vijay-devarakonda

தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோ இவர் தான். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதற்கு ஒரே காரணம் “அர்ஜுன் ரெட்டி” படம் தான்.

ஸ்டூடியோ கிரீன்

studio green

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் தேவர்கொண்டா. அவருக்கு ஜோடியாக மெஹரீன் பிர்சாதா நடிக்கிறார்.

vijay devarkonda mehreen pirzaada

மேலும் நாசர் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

vijay devarkonda mehreen pirzaada

இப்படத்தின் பூஜை இன்று காலை 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோஸில் நடந்தது. மேலும் படத்தின் முதல் ஷாட் 9 .36 மணிக்கு எடுத்துள்ளார்கள் படக்குழு.

studio green

படக்குழுவினருடன் விஜய் தேவர்கொண்டா

vijay devarkonda