Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது விஜய் தேவர்கொண்டாவின் “டியர் காம்ரேட்” பட பர்ஸ்ட லுக் போஸ்டர் !
விஜய் தேவர்கொண்டா
தெலுங்கு சினிமா என்ற வரையறையை தாண்டி இந்தியா முழுவதும் ரீச் உள்ள மனிதர். இதுவரை இரண்டு படங்கள் தான் ரிலீஸாகியுள்ளது. பெல்லி சூப்புலு படம் இவருக்கு நல்ல என்ட்ரி என்றால், அர்ஜுன் ரெட்டி தான் பிரேக் த்ரூ கொடுத்தது. நடிகை சாவித்திரியின் பயோபிக்கான ‘நடிகையர் திலகமும்’ ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் விஜய்.
இதனை தவிர்த்து அடுத்ததாக டாக்ஸிவாளா என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இருமுகன் இயக்குனரின் NOTA படத்திலும் நடித்து வருகிறார். இது மட்டுமன்றி இயக்குனர் பரத் கம்மாவின் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
Wish you a very happy birthday @TheDeverakonda Here is the first look of #DearComrade jointly producing @MythriOfficial @bigbencinemas @YashBigBen https://t.co/GJfzwDkSKA
— bharat kamma (@bharatkamma) May 8, 2018
இந்நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு, மற்றும் படக்குழு விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பரத் குறும்படங்கள் வாயிலாக நல்ல ரீச் ஆனவர். தன் நெருங்கிய நண்பரான ஜஸ்டின் பிரபாகரன் அவர்களை இசைஅமைப்பாளராக கமிட் செய்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு . ஸ்ரீஜித் சாரங் எடிட்டர். இப்படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ் – பிக்பென் சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

Vijay Devarkonda
ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதம் துவங்குமாம்.
