Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டாவால் அதிர்ச்சியில் உறைந்த நோட்டா படக்குழு
தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் மாஸ் காட்டிய விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சுவாரசிய தகவல்கள் நடைபெற்று இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காதல் கதையின் உண்மை வெளிச்சங்களை அப்பட்டமாக சொன்ன ஸ்பெஷல் படம். வருடத்திற்கு ஒரு முறை வெளிவரும் சில படங்களில் எல்லா மொழிகளிலும் வாவ் சொல்ல வைக்கும். முதலில், மலையாளத்தில் வெளியாகிய ப்ரேமம் படத்திற்கு தமிழ்நாட்டிலே தனி கிரேஸ் இருந்தது.
அனுபமா முதல் மடோனா செபஸ்டியன் வரை புகழப்பட்டார்கள். அதிலும், கோயம்புத்தூரில் இருந்து களமிறக்கப்பட்ட சாய் பல்லவி மலர் டீச்சராக அறிமுகமாக அட நம்ம பொண்ணுடா என தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதில், கூட ஒரு சுயநலம் இருக்கிறதென வைத்துக் கொள்ளலாம்.
கடந்த வருடம் வெளியான அர்ஜூன் ரெட்டியும் இதே ஸ்டைலில் கொண்டாடப்பட்டது. தெலுங்கு திரைப்படம் என்றாலும் தமிழ் ரசிகர்களே அடித்து பிடித்து திரையரங்குகளை ஹவுஸ்புல்லாக மாற்றினர். காரணம், அலட்டல் இல்லாத லவ், அடி தடி நாயகன், அப்பாவி நாயகி என படம் முழுதும் தெலுங்கு சினிமாவில் லாஜிக்குகள் உடைக்கப்பட்டது. முரட்டி பையன் என்றாலும் காதல் கசிந்துருக இருந்த விஜய் தேவரகொண்டாவின் மீது லவ்வில் சுற்றுகிறது தமிழ் அம்மணிஸ்.
விஜய் தேவரகொண்டா தற்போது சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். அரிமா நம்பி, இருமுகன் படங்களை தொடர்ந்து ஆனந்த்ஷங்கர் இப்படத்தை இயக்குகிறார். மெஹ்ரீன் பிர்சடா நாயகியாக நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். சத்யராஜ், நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ஆனந்த் ஷங்கர் ஒரு டுவீட் வைரலாக பரவி வருகிறது. விஜய் தேவரகொண்டா 3 பக்க தமிழ் டைலாக்குகளை ஒரே டேக்கில் பேசி அசத்தி இருக்கிறார். சத்யராஜ் உட்பட படக்குழு ஆச்சரிய அதிர்ச்சியில் அவரை பார்த்தார்களாம். இதனால், இன்றைய படப்பிடிப்பு விரைவாக முடிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேவரகொண்டா தமிழ் கற்று கொண்டு டப்பிங் பேசினாலும் ஆச்சரியம் இல்லை என்கிறது படக்குழு.
ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
