தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து மலையாள நடிகர் ரோஷன் பஷீரும் நடனம் ஆட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.