விஜய் நடனத்தில் மயங்கிய இசை அமைப்பாளர்

    தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மேலும் இதன் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தனது படங்களில் தொடர்ந்து பாடிவரும் விஜய் இந்த படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளாராம். இந்த பாடலில் நிச்சயம் விஜய்யின் நடன அசைவுகள் அதிர்வை ஏற்படுத்தும் என சந்தோஷ் நாராயணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.