Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடனம் ஆடுவதில் பிரபு தேவாவை விட விஜய் தான் பெஸ்ட்.! பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்.!
நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவில் நடனத்துக்கு பெயர் போனவர் இவரின் நடனம் அனைவருக்கும் பிடிக்கும், இவருக்கு அடுத்ததாக நடனத்தில் சிறந்து விளங்குபவர் தான் விஜய், விஜய்யின் நடனத்திற்கு ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
விஜய்யின் நடனத்திற்கு தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மற்றும் பாலிவுட் சினிமாவிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் தற்பொழுது விஜய்யை பற்றி பிரபல கிரிக்கெட் வீரரும்,நடிகருமான சடகோபன் ரமேஷ் ஒரு பேட்டியில் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.
அதில் பேசியதாவது தளபதி விஜய்யின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்தியாவில் மிகசிறந்த நடனம் ஆடக்கூடியவர் விஜய் மேலும் உண்மையில் சொல்லவேண்டும் என்றால் பிரபு தேவா நடனத்தை விட நான் விஜய் நடனத்தை தான் மிகவும் ரசித்துள்ளேன். இவர் எந்த கடினமான ஸ்டெப் என்றாலும் சிரித்துக்கொண்டு அந்த ஸ்டெப்பை சாதாரணமாக ஆடுவார் இது அனைவரையும் கவர்ந்துவிடும் என கூறினார்.
