இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் ஓட்டு போடுவதற்கு சைக்கிளில் வந்ததுதான். வீட்டிற்கு பின்னாடியே ஓட்டு போடும் இடம் இருந்ததால் விஜய் இந்த முடிவை எடுத்ததாக அவரது வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இப்படி சொல்லிக் கொண்டிருக்க சமூக வலைதளங்களில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போட தனது ரசிகர்களையும் மக்களையும் வலியுறுத்துவதாக கூறி வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக அவரது சைக்கிளில் இருந்த நிறங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடியின் நிறம் என்பதால் அதையே அவர்கள் தங்களுக்கு சாதகமாக்கி விஜய்யை போற்றிப் புகழ்ந்து சமூக வலைதளத்தை ஒரு வழி ஆகிவிட்டன. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து விஜய் சைக்கிளில் வந்தார் என ஒருபக்கம் கொளுத்திப் போடுகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து நியூஸ் சேனல்களிலும் விஜய் சைக்கிளில் வந்ததுதான் பிரதான செய்தியாக இருந்தது. விஜய் சைக்கிளில் வந்தால் சும்மா இருப்பார்களா அவரது ரசிகர்கள்.
அந்த சைக்கிளின் பெயர் என்ன, எவ்வளவு விலை என்பதையெல்லாம் இணையதளங்களில் தேடி கண்டுபிடித்து விட்டார்கள். அந்த சைக்கிள் மான்ட்ரா(MONTRA) என்ற நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது கியர் சைக்கிள் அம்சம் கொண்டது.
இந்திய ரூபாயில் இதனுடைய மதிப்பு கிட்டத்தட்ட 22 ஆயிரத்திற்கும் மேல். இது ஒரு சராசரிக் குடிமகனின் ஒரு மாத சம்பளம். ஆனால் இதையும் வாங்க தளபதி ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். வரும் வாரங்களில் விஜய் ரசிகர்கள் பலரும் இந்த சைக்கிளை வாங்கி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
