Entertainment | பொழுதுபோக்கு
இளம் இயக்குனருக்கு வாழ்த்து கூறிய தளபதி.. எதற்கு தெரியுமா?
சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் அருண்ராஜ் காமராஜிற்கு இளைய தளபதி விஜய் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகராக இருப்பவர் அருண்ராஜ் காமராஜ். அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகினார். இதையடுத்து, ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவர் எழுதி, பாடிய நெருப்புடா பாடல் சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் அடித்தது. இதனால் அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் பெருகியது.
இந்நிலையில், அருண்ராஜ் காமராஜ் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. நீண்டகால நண்பனுக்காக சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். எஸ்கே ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்று இருக்கிறார். நடிகர் சத்யராஜுக்கு படத்தில் முக்கிய வேடம் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இப்படத்திற்கு கனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. திபு நைனன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிரிக்கெட் வீராங்கனையாக துடிக்கும் ஐஸ்வர்யாவின் கனவை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக இருக்கிறது. நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. சமூக வலைத்தளத்தில் இதன் போஸ்டர் பெரும் வைரல் ஆகியது.
இதனால், அருண்ராஜ் காமராஜுக்கு தமிழ் ரசிகர்களும், கோலிவுட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு முக்கிய வாழ்த்தால் அருண்ராஜ் செம குஷியில் இருப்பதாக ட்வீட் தட்டி இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இளையதளபதி விஜய் அண்ணா என்னை ஊக்கப்படுத்துவதிலும், பாராட்டுவதிலும் தவறியதே இல்லை. காலையில் எழுந்து உங்கள் மெசேஜை பார்த்தது மும்முடங்கு சந்தோஷத்தை தந்து இருக்கிறது. உங்கள் ஊக்குவிக்கும் வார்த்தைகள் என் திரை வாழ்வின் சிறந்த நாளாக அமைந்து விட்டது. உங்களிடம் இருந்து ஆசீர்வாதத்தையும், பாராட்டையும் பெறுவதில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லை. லவ் யூ எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
