தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் ஆதரவால் கோடிகள் வசூல் பெறுவதால் தொடர்ந்து இவரது படத்தை தயாரிப்பதற்காக பல தயார் செய்து கொள்ளும் டோக்கன் போட்டு வரிசையாக உட்கார்ந்து உள்ளனர்.
தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான 6 படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் பெற்று தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளன. ஆனால் சினிமாவின் ஆரம்ப காலத்தில் விஜய் மற்ற நடிகர்கள் போலவே ஒரு வெற்றிப்படம் கொடுப்பதற்கு கஷ்டப்பட்டு உள்ளார்.
பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மட்டுமில்லாமல் இப்படத்தின் மூலம் தான் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்துமே தொடர்ந்து ரசிகர்கள் பிடித்துப்போக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.
நடிகர் விஜய் பற்றி தகவல் மற்றும் புகைப்படங்கள் ஏதாவது வெளியானால் உடனே அவரது ரசிகர்கள் அதனை ட்ரெண்டிங் செய்து விடுவார்கள். அப்படி நடிகர் விஜய் லயோலா கல்லூரியில் தனது நண்பருடன் எடுத்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படத்தை தான் அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் சஞ்சீவ் உட்பட அவரது நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அது நடிகர் விஜய் இப்போது இருப்பது போல அப்போதும் கைகட்டி சாந்தமாக இருந்துள்ளார். மேலும் மற்றொரு ஒப்பிடும் போது ஒரு வித்யாசமான உடை அணிந்து காட்சியளிக்கிறார் நடிகர் விஜய்.