fbpx
Connect with us

Cinemapettai

தளபதியின் கல்லூரி புகைப்படத்தை பகிர்ந்த நண்பர்.. இதுவா விஜய் என அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியின் கல்லூரி புகைப்படத்தை பகிர்ந்த நண்பர்.. இதுவா விஜய் என அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் பலரும் தன்னுடைய கல்லூரி கால நட்பை தொடர்கிறார்கள் என்றால் அது சந்தேகம்தான். ஆனால் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் தற்போது வரை கல்லூரி நட்பை தொடர்வதுதான் ஆச்சரியமளிக்கிறது.

தளபதி விஜய் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில்தான் படித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது அவருக்கு நண்பர்களாக இருக்கும் சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீநாத், சஞ்சீவ் போன்றோர் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

சினிமாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் சஞ்சீவ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சினிமாவில் தற்போது முன்னணி நாயகனாக கலக்கி வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சின்னத்திரையில் நாயகனாக கலக்கி வருகிறார். இவர் நடிக்கும் சீரியல்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படி இருக்கையில் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இருக்கும் விஜய்க்கும் அப்போது இருக்கும் விஜய்க்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அளவுக்கு உள்ள தளபதியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

vijay-college

vijay-college

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top