Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-selfie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்து கெத்து காட்டிய விஜய்.. வேற லெவல் வெறித்தனம்

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வளர்ந்து வருபவர் தளபதி விஜய். தற்போது இவருக்கு அடுத்து தான் மற்ற நடிகர்களின் வியாபாரம் அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிகில் படத்தில் 300 கோடி வசூல் காரணமாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விஜய் வரி ஏய்ப்பு செய்து இருப்பார் என எண்ணி பல அரசியல்வாதிகள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றாது நிலையில் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் திடீரென ஒரு கட்சியினர் மாஸ்டர் படத்தில் சூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெய்வேலியில் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் அங்கு கூட்டம் கூட்டமாக கூடினர்.

குடும்பங்களுடன் கூட்டம்கூட்டமாக விஜய்யை பார்க்க மக்கள் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திடீரென தளபதி விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் தனது செல்போனில் செல்பி எடுத்தார். வழக்கத்தைவிட விஜய் மிகவும் சந்தோசமாக இருந்ததால் விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top