Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-cm

Tamil Nadu | தமிழ் நாடு

விஜய்க்கு கிடைத்த முதலமைச்சர் வாய்ப்பு.. தந்தையால் நூலிழையில் தவறவிட்ட தளபதி

அரசியல் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தான் சில செய்திகள் தெரியவந்தது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படைப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றே கூறலாம். இந்த படத்தின் கதை அர்ஜுனுக்கு முன்னால் முதலில் ரஜினியிடம் சொல்லப்பட்டது ஆனால் ரஜினியால் நடிக்க முடியவில்லை. பின்பு விஜய்யும் மறுத்தார். விஜய் மறுத்ததற்கு காரணம் என்னவென்றால்,

முதல்வன் படம் முழு அரசியலைக் கொண்டு கதைக்களம் இருப்பதால் அப்போது நடிப்பதற்கு சற்று பயந்து விட்டாராம் தளபதி விஜய். அது மட்டுமில்லாமல் கால்ஷீட் பிரச்சினைகள் வேறு இருந்ததாம். அதுவும் இல்லாமல் அவருடைய தந்தையும் கலைஞர், ஜெயலலிதா இருக்கும் சமயத்தில் இப்பொழுது இதுமாதிரி கதை வேணாம் என்று மறுத்து விட்டார்களாம்.

ஆனால் இப்பொழுது வரை முதல்வன் படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று தளபதி விஜய் வருந்தியதும் உண்டு. அப்போதே அரசியல் சாயம் பூசப்பட்ட கதைக்களத்தில் நடித்திருந்தால் இப்போது தளபதி விஜய் ஒரு கட்சியின் தலைவராக கூட ஆகி இருக்கலாம். ஏன் என்றால் சில வருடங்களாக விஜய்யை சுற்றி நடக்கும் அரசியல் பிரச்சனைகள் தான்  காரணம்.

விஜய் ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி வருகிறது. அதனால்தான் இப்பொழுதெல்லாம் அவருடைய பேச்சிலிருந்து அனைத்தும் அரசியல் சாயம் கலந்து வருகிறது. முதல்வன் படத்தில் மட்டும் விஜய் நடித்திருந்தால் கண்டிப்பாக அவரை ரசிகர்கள் தூக்கி உயர்த்தி இருப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இப்பொழுது வரை முதல்வன் படத்தில் வரும் அர்ஜுன் போன்று ஒரு முதல்வர் கிடைக்க மாட்டாரா என்று தமிழ்நாட்டு மக்களே வேண்டி வருகின்றனர். ஆதலால் முதல்வன் படத்தில் விஜய் நடித்திருந்தால் என்ன ஆயிருக்கும் சற்று யோசித்து பாருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top