இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் 66 வது திரைப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை தளபதி 66 என்று படக்குழு அழைத்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய கதை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது விஜய் இந்தத் திரைப்படத்தில் எரோட்டோமேனியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எரோட்டோமேனியா நோயினால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவித கற்பனையிலேயே வாழ்வார்கள். அதாவது தன்னை ஒருவர் காதலிப்பதாக நினைத்து கொண்டு இருப்பார்கள். மேலும் இந்த விஜய் 66 திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.
இதனால் விஜய் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமாக இருப்பதால் நடிகர் விஜய் இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் விஜய் கூறியதாக அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தியால் தற்போது விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். விரைவில் இந்த படத்தினை குறித்த அப்டேட்டுகள் வெளிவர வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.