இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் முடிந்துவிடும். இதற்காக படக்குழுவினர் விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ‘விஜய் 60’ படத்தில் விஜய், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடித்து வருவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இதே படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷும் மாணவியாக நடித்து வருகிறார்

அதிகம் படித்தவை:  இந்திய அளவில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மெர்சல் மற்றும் விக்ரம் வேதா.! விக்ரம் வேதா எந்த இடம் தெரியுமா.!

கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்பன்’ படத்தில் எஞ்சினியரிங் கல்லூரி மாணவராக நடித்த விஜய், நான்கு வருடங்களில் மீண்டும் டாக்டர் ஸ்டுடண்ட் ஆக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

அதிகம் படித்தவை:  இந்த வருடத்தில் மட்டும் இத்தனை கோடியா.!விஜய் வேற லெவல்.!

விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, பாப்ரிகோஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வருகிறார்.