புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அந்த சீனில் முதல்ல வேற டயலாக் இருந்துச்சு, விஜய் தான் அத மாத்துனாரு.. சிவகார்த்திகேயன் பகிர்ந்த ரகசியம்

Sivakarthikeyan: அமரன் படம் ரிலீஸ் ஆன பிறகு எந்த பக்கம் திரும்பினாலும் சிவகார்த்திகேயன் பேச்சு தான். அடுத்த தளபதி, சூர்யா படத்தையே கதற விட்டுட்டாரு, டாப் ஹீரோ லிஸ்டில் வந்துவிட்டார் என்று எந்த பக்கம் பார்த்தாலும் அவரை புகழ்ந்து பேசிகிட்டு இருக்காங்க.

இதுவே அமரன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னால் ஒரு கண்டன்டு ஓடிக்கொண்டிருந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். போற போக்குல துப்பாக்கியை புடிங்க சிவா என்று விஜய் சொல்ல, அதற்காக சிலர் வறுத்தெடுத்தது என்னவோ சிவகார்த்திகேயனை தான்.

சிவகார்த்திகேயன் பகிர்ந்த ரகசியம்

எங்க போனாலும் துப்பாக்கி வெயிட் எப்படி இருக்குன்னு கேட்டு சிவகார்த்திகேயனை வச்சு செய்து கொண்டிருந்தார்கள். தற்போது அந்த காட்சியின் ரகசியம் குறித்து சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

கோட் படத்தில் வரும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் முதலில் துப்பாக்கிய புடிங்க சிவா என்ற வசனமே கிடையாதாம். இத பிடிங்க, சுட்டுட கூடாது என்று தான் இருந்ததாம். அதை விஜய் தான் இப்படி மாற்றியதாக சிவகார்த்திகேயன் பகிர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்காக அந்த வசனத்தை மாற்றினாரா அல்லது போற போக்கில் இப்படி சொல்லிவிட்டு போவோம் என சொன்னாரா என தெரியவில்லை.

- Advertisement -

Trending News