கமலையும் சூர்யாவையும் பார்த்து விஜய் திருந்துவாரா.. இந்த பிரச்சனைக்கு ஒரு எண்டே இல்லையா

அரசியல் வசனங்களை பேசி பல அவமானங்களை சந்தித்த பின் தற்போது தமிழ் சினிமாவில் இறங்கியுள்ள உலக நாயகன் கமலஹாசன் மற்றும் நடிகர் சூர்யாவை பார்த்து தளபதி விஜய் அரசியலில் இறங்குவதை பற்றி யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கமலஹாசனின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமலஹாசனுக்கு ஒரு சீட் கூட கிடைக்காததால் தோல்வியின் விரக்தியில் இருந்தார். இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படத்தில் நடித்து கமலஹாசன் தான் எப்போதுமே உலகநாயகன் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் கமலஹாசன் தற்போது அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல நடிகர் சூர்யாவும் பல மேடைகளில் அரசியல் வசனங்களை பேசி அவருடைய திரைப்படங்களை வெளியாவதற்கு கூட பெருமளவில் சிரமப்பட்டு உள்ளார்.

தற்போது இவர் விக்ரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது மூலமாக, சூர்யாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் சற்று எகிறி உள்ளது. இதனை பயன்படுத்தி தற்போது திரைப்படங்களில் நடிப்பதை அதிக கவனம் செலுத்தி விட்டு அரசியல் வசனங்கள் பேசுவதை குறைத்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகயுள்ளது.

இதனிடையே தற்போது தளபதி விஜய், பல திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில் கூடிய விரைவில் அரசியல் கட்சி தொடங்கி முழு நேரம் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கமலஹாசன் மற்றும் சூர்யாவின் நிலைமையை பார்த்து கண்டிப்பாக தளபதி விஜய் அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற யோசனைக்கு வருவார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்